Header Ads

ஸஹ்ரானின் மற்றொரு தாக்குதல் திட்டம் தொடர்பில் தகவல்

ஸஹ்ரான் ஹாசிமின் அடிப்படைவாதக் குழு 2020ம் ஆண்டில் இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின நிகழ்வு, முக்கிய ஹோட்டல்கள் மற்றும் வைத்ிதியசாலைகள் மீதும் ஒரே தடவையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அருண சிங்கள இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.

அம்புலன்ஸ் வண்டிகளில் வெடிபொருட்களை நிரப்பி கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி வைத்தியசாலைகளில் பாரிய வெடிப்பு சம்பவங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள தற்கொலை தாக்குதல் பயிற்சி பெற்ற நபர் ஒருவர் மூலமே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

Powered by Blogger.