Header Ads

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் ரிஷாத் பதியுதீனின் சகோதரருக்கு நேரடி தொடர்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதுயிதீனின் சகோதரர் குண்டு தாரிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய காவல் துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

ரிஷாட்டின் சகோதரர் குண்டுதாரியொருவருடன் பிரபல ஹோட்டல் ஒன்றில் குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு முன்னர்,   கலந்துரையாடியுள்ளமை விசாரணைகள் மூலம்  தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படடது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் 119 பேர் காவல் துறை அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்,குற்றப்புலனாய்வு பிரிவனரால் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Powered by Blogger.