Header Ads

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையின் தற்போதைய நிலவரம்

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து மேலும் 05 கொரோணா தொற்றாளர்கள் உறுதியாகியுள்ளதுடன், கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பிரதேசத்தில் இருந்த 1010 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
242 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதனர்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் தடுப்பு பிரிவின் புதிய தகவல்களுக்கமைய நேற்று (20) காலை 24 நோயாளர்களும், பிற்பகல் வேளையில் 8 தொற்றாளர்களும் ஒரு தொற்றாளர் மாலை வேளையும் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 32 பேர் கொழும்பு - வாழைத்தோட்டம் - பண்டாரநாயக்க மாவத்தை சேர்ந்தவர்கள் என அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களுடன் அந்த பகுதியில் இனங் காணப்பட்ட கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே பிரதேசத்தில் அதிகளவானோருக்கு கொரோணா தொற்று ஏற்பட்ட பிரதேசமாக பண்டாரநாயக்க பிரதேசம் பதிவாகியுள்ளது.

குறித்த பரதேசத்தில் சுமார் 20 பர்சஸ் வரையான நிலப்பரப்பில் 60 குடும்பங்கள் வசித்து வருவதாக கொழும்பு மாநகரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அந்தப் பகுதி கொரோணா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டு, முழுமையாக முடக்கப்பட்டுள்ளமை கூறத்தக்கது.

No comments

Powered by Blogger.