Header Ads

கோட்டா தொடர்பான பௌசியின் உரை தொடர்பில் விஷேட விசாரணை



பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பெளஸி ஆற்றியதாக கூறப்படும் உரை தொடர்பில் விஷேட விசாரணைகளை கிராண்பாஸ் பொலிஸார்  ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் கிராண்பாஸ் பொலிஸார் விஷேட அறிக்கை ஊடாக கொழும்பு பிரதான நீதிவான்  நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

வடகொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாலத்துறை பிரதேசத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதன்போதே பெளஸி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக உரையாற்றியிருந்தார்.

இந் நிலையில், குறித்த விசாரணைகளுக்காக குறித்த தினம் பெளஸி எம்.பி. ஆற்றிய உரையின் செம்மைப்படுத்தப்படாத ஒளிப்பதிவை, அந்த நிகழ்வில் பங்கேற்ற இலத்திரணியல் ஊடகங்கள்,  விசாரணைகளுக்காக கிராண்பாஸ் பொலிஸாருக்கு ஒப்படைக்குமாறு இதன்போது  கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நிரஞ்ஜனா டி சில்வா உத்தரவிட்டார்.

Powered by Blogger.