Header Ads

நாட்டின் அடுத்த பிரதமர் ரணிலா? மஹிந்தவா?



கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

‘மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வந்த போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். எங்களிடத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. 

எனினும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அப்போது நியமித்தார்.
ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து அடுத்த நாள் பிரதமர் பதவிப்பிரமாணம் செய்தார்.

அப்போது 147 பேர் எங்களிடம் இருந்தனர். அந்த முறையை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் பிரதமராக நியமிப்போம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொள்வது கட்டாயமாகும். அவ்வாறு இல்லாது பிரதமர் பதவிக்கு வேறு நபர்களை நியமிக்க முடியாது.

19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்கள் வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாது.

இதேவேளை சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் தானே பிரதமர் என்று ரணில் விக்ரமசிங்க நேற்று கூறியுள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக தௌிவுபடுத்திய செய்தி சிலோன் நேசன் இணையத்தளத்தில் ஏற்கனவே பிரசுரித்திருந்தது.

அந்த செய்தியை வாசிக்க இங்கே அழுத்துங்கள்
 

Powered by Blogger.