மீண்டும் சர்ச்சையில் மாட்டிக் கொண்ட ஹிஸ்புல்லா; காப்பாற்றுவாரா மஹிந்த?
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு ஹிஸ்புல்ல நிதி பெற்றுக் கொண்டுள்ள விதம் சட்ட விரோதமானது என்பதால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் மனி வளம் சம்பந்தமான கண்கானிப்பு குழுவின் பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக அந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க கூறியுள்ளார்.
ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பனராக செயற்பட்டுக் கொண்டு அரசாங்கத்துடன் உடன்படிக்கை கையொப்பமிட்டுள்ள வவிதம் முற்றிலும் சட்ட விரோதமான முறையில் இருப்பதாக அவர் கூறினார்.
இதன் காரணமாக அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கடந்த காலத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Post a Comment