Header Ads

கோட்டாபயவுக்கும் சஜித்துக்கும் இடையிலான வித்தியாசம் இதுதான்



ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தான் பதவிக்கு வந்தால் வழங்குவதாக கோட்டாபய ராஜபக்‌ஸ வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து பதவியிலுள்ளபோது கேள்வி எழுப்பினால், துப்பாக்கி மூலம் தான் பதில் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

ஆனால், வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டம் செய்பவர்களை சஜித் பிரேமதாச தாக்கவோ கொல்லவோ மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க செயற்பாட்டு நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.


எமது ஆட்சியில் 12 இலட்சமாக இருந்த அரச ஊழியர்களின் தொகை 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டது.

சம்பளம் அதிகரிக்கப்பட்டது. ஆனால், இன்று ராஜபக்‌ஸவினர் பல பொய் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

தனியாக ஊடக சந்திப்பொன்றை நடத்த முடியாத கோட்டாபய ராஜபக்‌ஸ, இதுவரை சஜித் பிரேமதாஸவின் அழைப்பை ஏற்று விவாதத்திற்கு வரவில்லை.

இவர் ஆட்டுவிக்கும் பொம்மைாயாகவே இருக்கிறார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  
Powered by Blogger.